இலங்கையின் உலக கிண்ண அணி தேர்வு -விளையாட்டுத் துறை அமைச்சர் விபரம்..!

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதி வழங்கியுள்ளார். இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13, 2022 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்காக பரிந்துரைத்த இலங்கை அணிக்கு 13ஆம் திகதி ஒப்புதல் அளித்தேன். இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிக விரைவில் இறுதி அணி விபரத்தை அறியமுடியும், போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அணி விரைவில் அறிவிக்கப்படும். பல்லேகெலவில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்குப் பிறகு, இலங்கை அணி அக்டோபர் முதல் வாரத்தில் உலக்கிண்ணப் போட்டிக்காக புறப்படும்.

ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டித் தொடருக்கு முன்னர் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

இலங்கை அணி முதல் சுற்றில் நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இளம் அணி அண்மையில் ஆசியக் கிண்ணம் வென்று வரலாறு படைத்திருந்த நிலையில் உலக கிண்ணம் நோக்கிய பார்வை ரசிகர்களுக்கு அதிரித்திருக்கிறது.

 

எமது YouTube தளத்துக்கு செல்வதற்கு ?