இலங்கையின் கால்பந்தாட்ட அணி விபரம் அறிவிப்பு..!

சுஜன் பெரேரா தலைமையிலான இலங்கை கால்பந்தாட்ட அணியின் விபரத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

2022 ல் கட்டாரில் இடம்பெறவுள்ள கால்பந்து உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் மற்றும், 2023 ல் சீனாவில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகள் போன்றவற்றுக்காகவே அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் 28 வயதான சுஜன் பெரேரா தலைவராகவும், கவிந்து இஷான் & வசீம் ரஷீக் ஆகியோர் உதவி தலைவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக மே மாதம் 31 ம் திகதி தென் கொரியா நோக்கி இலங்கை அணி புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அணி விபரம்.

சுஜன் பெரேரா (தலைவர்) -வயது 28
பிரபாத் ருவான் அருணசிரி -வயது 27
தனுஷ்க -வயது 28
ஹர்ஷ பெர்னாண்டோ -வயது 28
ரோஷன் அப்புஹாமி -வயது 27
சமோட் டில்ஷான் -வயது 24
சரிதா பண்டார ரத்னநாயக -வயது 28
டுக்சன் புஸ்லாஸ் -வயது 31
சதுரங்க மதுஷன் -வயது 27
மார்வின் ஹாமில்டன் – -வயது 32
சலன சமீரா -வயது 28
ஜூட் சுபன் -வயது 22
மொஹமட் முஸ்தாக் -வயது 22
மொஹமட் பசால் -வயது 31
கவிந்து இஷான் (Vice Captain) -வயது 28
டிலோன் சேனன் டீ சில்வா
அஹ்மத் வசீம் ரஷீக் (உதவி தலைவர்) -வயது 26
மொஹமட் ஆகிப் -வயது 20
அஸிகுர் ரகுமான் -வயது 27
மொஹமட் காஸ்மீர் -வயது 23
சுபுன் தனஞ்சய -வயது 23 ,

ரிஃகான் மொஹமட் -வயது 21