இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோனுக்கு ஒரு லட்சம் டொலர்கள் -ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிதியுதவி..!

யுபுன் அபேகோனுக்கு வருடத்திற்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வீதம் இரண்டு வருடங்களுக்கு 1 இலட்சம் டொலர்களை வழங்க ஶ்ரீ லங்கா கிரிக்கெட்  தீர்மானித்துள்ளது.

அதன்படி, யுபுன் அபேகோனின் இரண்டு வருடங்களுக்கான அனுசரணை 100,000 அமெரிக்க டொலர்களாகும்.

இதன் பெறுமதி இலங்கை நாணயத்தில் 36 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கொழும்பு அபேக்‌ஷா வைத்தியசாலைக்கும் வழங்கியது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு 22.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையானது இலங்கை நாணயத்தில் 719 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, அவுஸ்திரேலிய அணியின் சுற்றுப்பயணத்துக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த 120 மில்லியன் ரூபா பணத்தை விளையாட்டு அமைச்சுக்கு வழங்க நம்புவதாக தெரிவித்தார்.

இதேவேளை, மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக எதிர்காலத்தில் தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திரு.ஷம்மி சில்வா மேலும் தெரிவித்தார்.

YouTube தளத்துக்கு ?

புதிய டெஸ்ட் தரவரிசை ?

ODI Chasing இன் போது அதிக Notout -தோனி முதலிடம்..!