இலங்கையின் சுழலில் சரிந்த இந்தியா ..!

Ind vs Sl 2nd test…

ஆட்டத்தின் முதல் பந்து வீசப்பட்டு ஆடுகளத்தில் மோத மண் தெறிக்கிறது. வர்ணனைப் பெட்டியில் இருந்தவர்களின் குரல்களில் ஆச்சரியம்!

டாஸிற்கு முன் Try pitch, grass கிடையாது, பேட்டிங்கிற்கு சாதகமான pitch என்று கிரிக்கெட் எக்ஸ்பர்ட்கள் சொல்லிக்கொண்டிருக்க, முதல் பந்து வீசப்பட்டதும் அவர்களின் கணிப்பில் மண் விழுகிறது.

இது 150 முதல் 180 ரன் pitchதான். சுமாரான ஒழுக்கத்தையும் பந்துவீச்சில் கடைப்பிடிக்காத இலங்கை பந்துவீச்சாளர்களால்தான் 250+ ரன்களை இந்தியா எட்டியிருக்கிறது.

அதேசமயத்தில் ஸ்ரேயாசின் ஆட்ட அணுகுமுறையை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஸ்பின்னில் கிரிஸில் நின்றோ, வெளியேறி வந்தோ vயின் இடப்புறத்தில் சிக்ஸ் அடிக்கும் தன் தனித்திறமையால் அணிக்குத் தேவையான ரன்களை கொண்டுவந்திருக்கிறார்.

இந்த ஆடுகளத்தில் முதலில் தாக்குவதே மிகச்சிறந்த தற்காப்பு என்கிற யுக்தி, இந்திய அணியின் பேட்டிங் யுக்தியாய் இருந்திருக்கிறது. இந்த யுக்திக்கு எல்லா பேட்ஸ்மேன்களும் சரியான இன்டென்ட் காட்டியது சிறப்பு.

இப்படிப்பட்ட சுழலுக்குச் சாதகமான ஆடுகளத்தில் கூட, கொஞ்சம் நின்று நிதானித்து ஆடுகளத்தன்மையை உணர்ந்து, பேட்ஸ்மேனுக்கு தொடர் நெருக்கடியைத் தர முடியவில்லை என்றால், இலங்கையின் சுழலர்களின் அடிப்படையான திறனிலேயே குறை இருக்கிறதென்றுதான் அர்த்தம்.

Dewவும், மின்சார விளக்குகளின் வெப்பமும் பெரிதாய் இந்தியச் சூழலர்களையும், ஆடுகளத்தையும் பாதிக்காது, தற்போதைய நிலையேதான் தொடருமென்று நினைக்கிறேன்.

அடுத்து இப்படிப்பட்ட ஆடுகளங்களை அமைப்பதாய் இருந்தால் bcci டெஸ்ட் போட்டிகளையி நடத்தாமலிருப்பது நல்லது!

இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளது.

பார்ப்போம்!

Richards