இலங்கையின் டொலர் நெருக்கடியை தீர்க்க இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் T20 தொடர்..!

இலங்கையின் டொலர் நெருக்கடியை தீர்க்க இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் T20 தொடர்..!

ஆசியக் கோப்பைக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நெருங்கிய நட்பு நாடு எனும் வகையில் சில மதிப்புமிக்க வெளிநாட்டு நாணயங்களை ஈட்ட இந்த தொடர் உதவும் என்று தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) ஒரு தாராளமான நண்பராக இருந்து வருகிறது, அவர்களின் தேசிய அணியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனும் இலங்கை கிரிக்கெட் (SLC) கோரிக்கை விடுத்தபோது அவர்கள் மீண்டும் ஒப்புக்கொண்டனர்.”

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த இலங்கை கிரிக்கெட் பரிசீலித்து வருவதால், இந்த இரண்டு போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் என்று தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பையையொட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால், இந்த போட்டிகளும் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம். “இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆனால் பெரும்பாலும் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கும்” என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20I தொடரில் இந்தியா இலங்கையுடன் விளையாடிய போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 14.5 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது.

YouTube link ?