இலங்கையின் தேசிய தடகள சாம்பியன் திடீர்மரணம்…!

400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற மதுஷானிக்கு நிர்வாண இன்ற இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்.

இலங்கையின் ஓட்டவீராங்கனை தற்கொலை!

26 வயதான மதுசானி நேற்றிரவு தும்மலசூரிய பிரதேசத்திலுள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

ஹோமாகம ,தியகம மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 100 வது தேசிய விளையாட்டுப்போட்டியில் 400 M தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

நேபாளத்தின் காத்மண்டு நகரில் 2019 ல் நடைபெற்ற சார்க் விளையாட்டுப்போட்டியில் 400 M தடை தாண்டல் மகளிர் பிரிவில் வௌ்ளிப் பதக்கம் சுவீகரித்த குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

துயர்மிகு பிரார்த்தனைகள்.