இலங்கையின் பதக்க கனவு கலைந்தது..!

இலங்கையின் பதக்க கனவு கலைந்தது..!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுப்பார் எனும் நம்பிக்கை யுபுன் அபேகோன் மீது ரசிகர்களுக்கு இருந்த்து.

இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவது தகுதிகாண் (Heats) போட்டிகளில் 100 M தடகளப் போட்டியில் பங்கேற்ற யுபுன் ஆறாவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக 1948 இலே 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் டங்கன் வைட், 2000 ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் சுசந்திக ஜயசிங்க 200 மீட்டர் ஓட்டத்திலும் பதக்கங்களை வென்று கொடுத்த பின்னர், இலங்கை சார்பில் எவராவது ஒருவர் பதக்கம் வெற்றிகொள்ள மாட்டாரா என்ற ஏக்கம் தொடர்கதையாகும் என்பதுதான் கவலைக்குரியது.

யுபுன் இறுதிப்போட்டிக்கு தெரிவாக முடியாது போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/444744385565109/posts/4428146937224814/