இலங்கையின் பயிற்சியாளர் பணியில் நவீத் நவாஸ்..!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற முதல் இலங்கை நாட்டை சேர்ந்த பயிற்சியாளர் நவீத் நவாஸ், இலங்கை கிரிக்கெட் அணியில் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அன்மையில் மார்க் சில்வர்வூட் நியமனம் பெற்றிருந்தார் .

இந்த நிலையில் அவருக்கு உதவியாகவே இலங்கையின் முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரரான நவாஸ் உதவி பயிற்சியாளர் நியமனத்தில் அமர்த்ப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நவீத் நவாஸ் 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இலங்கை U19 அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்து பங்களதேஷ் இளையோர் உலகக் கிண்ணத்தை தனதாக்கியது .

அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நவாஸ் செயல்பட்டவர் என்பதும் சிறப்பம்சம்.