இலங்கையின் ரஸ்ஸல் ஆர்னோல்ட்டுக்கு இப்படி ஒரு சோதனையா- இளையோர் உலக கிண்ணத்தில் அதிர்ச்சி..! (வீடியோ இணைப்பு)
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்று வரும் இளையோர் உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய இரண்டாவது காலிறுதியில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய 2 வது காலிறுதியில் 135 எனும் இலகு இலக்குடன் ஆடிய இலங்கை இளையோர் அணி 45 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் அணித்தலைவர் வெல்லலகேயின் பொறுப்பான துடுப்பாட்டத்தின் துணையுடன் போட்டியில் போராடி 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
4 ஓவர்களில் 4 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில் தேவையற்ற ஓட்டத்தை பெறமுனைந்த ட்ரேவேன் மத்தியூ இறுதி விக்கெட்டை தாரை வார்த்தார்.
இந்தநிலையில் போட்டியில் வர்ணனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கையின் முன்னாள் வீரரான ரசல் ஆர்னோல்ட் அதிர்ச்சியில் உறைந்துபோய் வாயடைத்துப் போன தருணம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளிவந்துள்ளது.
வீடியோ இணைப்பு.
Russel Arnold’s reaction at the com box says it all ?
Sri Lanka gave at all and fought hard, tough luck @RusselArnold69 #U19CWC #U19CWC2022 pic.twitter.com/k30ljlrDLY— Bashir Gharwal غروال (@Bashir_Gharwal) January 28, 2022