இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள்.
நாமல் & மஹேல முன்மொழிவு.
தேசிய உயர் செயல்திறன் உத்தி மற்றும் விளையாட்டு அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வழிகாட்டலில் புதிய முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் தடவையாக தேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தொழில்முறை அடிப்படையில் அவர்களை இணைத்துக் கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தனது முன்மொழிவை மேற்கொண்டார்.
கொழும்பில் தேசிய உயர் செயல்திறன் வியூகம் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி முறையை நேற்று (27) தேசிய விளையாட்டு சபையின் தலைவர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான குழுவினர் அறிமுகப்படுத்தினர்.
ஒலிம்பிக்கில் ஒரு தடகள வீரருக்கு தங்க பதக்கம் ? கிடைத்தால், அவருக்கு 50 மில்லியன் வெகுமதி கிடைக்கும் வண்ணம் திட்ட முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கே சில சுவாரஸ்யமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன .
வெள்ளி பதக்கம் வென்றால் ? 25 மில்லியன் ,
வெண்கல பதக்கம் வென்றால் ? 10 மில்லியன் .
குழு விளையாட்டு நிகழ்வில் தங்க பதக்கம் ? 100 மில்லியன்
வெள்ளி பதக்கம் ? 50 மில்லியன்
வெண்கல பதக்கம் ? 20 மில்லியன் ரூபாய்களும் வெகுமதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வெகுமதித் திட்டம் ஆசிய விளையாட்டுக்கள், பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக முன்னெடுக்கப்படும், மேலும் விளையாட்டு வீரர்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும், இலங்கையில் எந்தவொரு விளையாட்டு தொடர்பான அனைத்து புள்ளிவிவரங்களையும் வைத்திருக்கவும் ஒரு தேசிய விளையாட்டு தரவு மையம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் விளையாட்டை அபிவிருத்திக்கு இட்டு செல்லலாம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.