இலங்கையின் வெற்றிகரமான தலைவராக உருவெடுக்கும் தசுன் ஷானக்க_ நம்பிக்கையோடு காத்திருக்கும் ரசிகர்கள் ..!

இலங்கையின் வெற்றிகரமான தலைவராக உருவெடுக்கும் தசுன் ஷானக்க_ நம்பிக்கையோடு காத்திருக்கும் ரசிகர்கள் ..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இலங்கை அணி அண்மைக்காலமாக மோசமான பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்தித்து வரும் நிலையில் ஒட்டுமொத்தமான ரசிகர்களின் அதிருப்திக்கு இலங்கை கிரிக்கட் உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில் புதிய தலைவராக ஷானக நியமிக்கப்பட்டதன் மூலம் இலங்கை கிரிக் கெட்டில் ஏதோவொரு பிரகாசமான மாற்றத்தை செய்தார் என்று பாராட்டப்படுகிறது.

2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அணி T20 கிண்ணங்கள் இரண்டை வெற்றி கொண்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று இலங்கை அணி தசுன் சானக்க தலைமையில் 3-0 என்று T20 தொடரை வென்று வரலாறு படைத்தது, இதற்குப் பின்னர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் பலம்பொருந்திய அணியாக இந்திய அணி இலங்கை வந்தபோது அதிகமானவர்கள் இலங்கை அணியை எள்ளி நகையாடினார்கள்.

ஆனாலும் தசுன் சானக்க தலைமையில் ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியையும், டுவென்டி-20 தொடரில் இரண்டு வெற்றிகளையும் பெற்றுத் தொடரையும் இலங்கை அணி தனதாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தொடர், இப்போது இலங்கையில் வைத்து இந்தியாவுடனான தொடரையும் வென்று அசத்தி இருக்கிறார் தசுன்.

சங்கக்கார, மஹேல ஜெயவர்தன தலைவர்களாக இருந்த காலகட்டத்திலேயே 2008ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவை எதுவித தொடர்களிலும் வெற்றி கொள்ள முடியாத அவல நிலையை கொண்டிருந்த இலங்கை அணியை, இப்போது இந்தியாவுடனான தொடரை வென்றுகாட்டி தசுன் சானக்க வெற்றிகரமான தலைவராக பாராட்டப்படுகிறார்.

அடுத்தவரும் தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை நல்குவார் என்று ஆவலுடன் காத்திருப்போம்.