இலங்கையின் வெற்றியை குறைத்து மதிப்பிட வேண்டாம், இந்திய ரசிகர்களிடம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கோரிக்கை..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான T20 போட்டி தொடர் நிறைவுக்கு வந்தது.
2-1 என இலங்கையின் இளம் அணி அபாரமான வெற்றியை இந்தியாவுக்கு எதிராக ஈட்டிக் கொண்டது.
இந்த வெற்றி குறித்து Sony Sports ல் பேசியபோது ஒரு முக்கியமான விடயத்தை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படுத்தினார்.
இலங்கையர்களின் வெற்றியை குறைத்து மதிப்பிட வேண்டாம், இது இந்தியாவின் இளம் அணி என்பதைப்போன்று இலங்கையும் இளம் அணியாகே தொடரை எதிர்கொண்டு இருக்கிறது.
அவர்களின் பல சிரேஷ்ட வீரர்கள் அணியில் இல்லை என்பதை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டுகிறார், ஆகவே இது ஒரு தரமான வெற்றி என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு இந்த வெற்றியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
அஞ்சலோ மத்தியூஸ், குசல் ஜானித் பெரேரா, தினேஷ் சந்திமல், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரின் அனுபவத்தை இலங்கை தவறவிட்டதாகவும், கடந்த இரண்டு ஆட்டங்களில் காயம் காரணமாக முக்கிய வீரர்களான பானுகா ராஜபக்ஷ மற்றும் சரித் அசலங்கவை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்த வெற்றி ஒரு குறைந்துபோன இந்திய தரப்புக்கு எதிரானது கிடையாது எனவும் தெரிவித்தார்.