இலங்கையின் 3 வது வீர்ருக்கும் கொரோனா- அடிக்கு மேல் அவுஸ்ரேலிய மண்ணில் அடி..!

இலங்கை அணியின் சகலதுறை ஆட்ட வீரர் வணிந்து ஹசரங்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை மற்றும் அவுஸ்த்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் பினுர பெர்னான்டோ ஆகியோர் அவுஸ்ரேலிய தொடரில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர்.

 

இதில் குசல் மென்டிஸ் தொற்றில் இருந்து விடுதலை பெற்று இருந்தாலும் கூட, நேற்றைய நாளில் பந்துவீச்சாளர் பினுர பெர்னான்டோ தொற்றுக்குள்ளானார் .

இப்போதைய நிலையில் ஹசரங்கவின் இடத்துக்கு Jeffrey Vandarsay விளையாட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.