இலங்கையின் T20 உலக கிண்ண அணிக்கு லசித் மலிங்க வேண்டும்- நாமலின் விருப்பம்..!

இலங்கையின் T20 உலக கிண்ண அணிக்கு லசித் மலிங்க வேண்டும்- நாமலின் விருப்பம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அண்மையில் T20 உலகக்கிண்ண போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காததை அடுத்து, ஒட்டுமொத்தமான கிரிக்கெட் வாழ்வுக்கும் விடைகொடுப்பதாக  அறிவித்தார்.

இந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்கு வழங்கியிருக்கும் பேட்டி ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, லசித் மலிங்கா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு அணியில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென தான் விரும்பியதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இலங்கை தேர்வு குழுவும் கிரிக்கெட் கமிட்டியும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்ததாகவும் அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை எனும் கருத்து லசித் மலிங்க தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து வந்திருக்கிறது.

குறிப்பாக தன்னுடைய தந்தையார் பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் தனக்கு  மிகவும் பிடித்தமான இலங்கை வீரர் லசித் மலிங்க என்கிற கருத்தையும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

39 வயதாகும் லசித் மலிங்க ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், T20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுகின்ற எத்தனிப்பில் இதுவரைக்கும் ஓய்வு பெறாமல் இருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

நாமல் ராஜபக்ச வழங்கிய பேட்டியின் முழுமையான விபரம்- சகோதர மொழியில்.