இலங்கையில் இடம்பெறவிருந்த ஆசிய கிண்ண போட்டிகளை திட்டமிட்டபடி எதிர்வரும் ஜூன் மாதம் நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர் ஆஷ்லி டீ சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
கடந்தாண்டு பாகிஸ்தானில் போட்டிகள் திட்டமிடப்பட்டு கொரோனா காரணமாக இந்தாண்டு ஜூன் மாதத்துக்கு பிற்போடப்பட்டு அந்த போட்டிகள் இலங்கையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இந்த போட்டிகள் இந்தாண்டிலும் நடத்த முடியாதுள்ளதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர் ஆஷ்லி டீ சில்வா, 2023 உலக கிண்ண போட்டிகள் வரையில் இந்த போட்டிகள் இடம்பெற சந்தர்ப்பம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அறியவருகின்றது.