இலங்கையில் சர்வதேச கால்பந்து மைதானம்-சுற்றுலாத்துறை அமைச்சர் இணக்கம்..!

இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கட்டார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஷேக் ஹமட் பின் கலீபா பின் அஹமட் அல்தானியுடன் கலந்துரையாடியுள்ளார்.

கட்டார் கால்பந்து சம்மேளன தலைவருடனான சந்திப்பில் விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார்.

இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எமது YouTube தளத்துக்கு செல்ல 👇