இலங்கையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடருக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்

இலங்கையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடருக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இடம் பெறுவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளன.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பத்து நாட்கள் கொண்ட நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு (LockDown) சட்டம் காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு தகவல் தெரிவித்து, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறித்து ஒருநாள் தொடர் முன்னர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டையில் நடைபெற முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கையில் கடந்த 20 ம் திகதி பத்து நாட்கள் கொண்ட நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.