20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இன்றிரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் போட்டியிடவுள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருப்பதால் இன்றைய தினம் இரு அணிகளும் தமது 2-வது வெற்றியை இலக்காகக் கொண்டு மோதுகின்றன.