இலங்கையை கதற வைக்கும் தவான் – அம்லாவின் சாதனையை முறியடித்தார்..!

இலங்கையை கதற வைக்கும் தவான் – அம்லாவின் சாதனையை முறியடித்தார்..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ஷிகார் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக விரைவாக ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக்கொண்டது எனும் சாதனை இன்று ஷிகார் தவான் வசமானது.

இன்று 143 வது போட்டியில் விளையாடும் ஷிகார் தவான், ஏற்கனவே வயது முதிர்ந்த வீரராக இந்தியாவிற்கு தலைமைத்துவம் ஏற்று இந்திய சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக 17 ஓட்டங்களை பெற்றபோது விரைவாக இலங்கைக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட சாதனையை தனது 17 ஆவது இன்னிங்சில் இன்று நிலைநாட்டினார்.

ஏற்கனவே ஹாசிம் அம்லா 18 இன்னிங்ஸ்களில் இலங்கைக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை சாதனையாக கருதப்பட்டது.

இந்த சாதனையை இன்று தவான் முறியடித்திருக்கிறார்.