இலங்கையை சந்திக்கவுள்ள தென்னாபிரிக்க அணியின் விபரம் வெளியானது…!

இலங்கையை சந்திக்கவுள்ள தென்னாபிரிக்க அணியின் விபரம் வெளியானது…!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான அணி விபரத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

தெம்பா பபுமா தலைமையில் ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன .

தென்னாபிரிக்க அணியின் முன்னணி  வீரர் குயிண்டன் டி கொக், லுங்கி என்கிடி ஆகியோர் T20 போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளார்.

குயிண்டன் டி கொக்கிற்கு, ஒருநாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன் லுங்கி என்கிடி தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 மற்றும் 19 வீரர்கள் இந்த அணிகளில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின்ற இந்த தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

SA T20 squad