இலங்கையை சந்திக்கவுள்ள பலமான இந்திய அணி அறிவிப்பு- முக்கிய வீரர களுக்கு ஓய்வு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) பிப்ரவரி 19 சனிக்கிழமையன்று, இலங்கைக்கு எதிரான டி20 ஐ தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை  அறிவித்தது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியின் டி20 அணியை அறிவிக்க தேசிய தேர்வுக் குழுவின் தலைவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பிற்கு தலைமை தாங்கினார்.

சனிக்கிழமையன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சர்மா, இலங்கை மற்றும் இந்தியா இடையே வரவிருக்கும் டி 20 தொடரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) கோஹ்லி மற்றும் பந்த் ஆகியோருக்கு ஓய்வு அளித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

இலங்கை தொடரில் ரோஹித்தின் துணை தலைவராக ஜஸ்பிரித் பும்ரா இருப்பார் என்பதை சர்மா உறுதிப்படுத்தினார். T20I தொடரில், விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, ரவீந்திர ஜடேஜா T20I அணிக்கு திரும்பினார். சஞ்சு சாம்சன் திரும்ப அழைக்கப்படுகிறார்,  கோஹ்லி, ராகுல் மற்றும் பான்ட் ஆகியோர் இந்த அணியில் இல்லை.

இலங்கைக்கு எதிரான இந்திய தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

லக்னோவில் 24 ஆரம்பிக்கும் தொடரில், தரம்ஷாலா இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளை நடத்தும் அதே வேளையில் மொஹாலியில் முதல் டெஸ்ட் போட்டியும் பெங்களூருவில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாகவும் நடைபெறுகிறது.

T20I தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா (உ. த), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன் (WK), ரவீந்திர ஜடேஜா , யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.