இலங்கையை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் முதுகு அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடையாததால்,  தேசிய அணியில் இடம் பெறவில்லை, இப்ராஹிம் சத்ரன் தலைமையிலான T20 அணியில் 16 வீரர்கள் உள்ளனர்.

ரஷித் கானுக்குப் பிறகு, நாட்டின் முன்னணி  வீர்ரான முஜீப் உர் ரஹ்மானும் இந்த T20 தொடரை இழந்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கும் முன் அவரது வலது கையில் ஏற்பட்ட காயம்தான் அதற்குக் காரணம்.

இதற்கிடையில், இக்ரம் அலிகில் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது இஷாக் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வஃபாதர் மொமண்ட் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான T20 போட்டித் தொடர் எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி:

இப்ராஹிம் சத்ரான் (C), ரஹ்மானுல்லா குர்பாஸ் (wk), முகமது இஷாக் (wk), ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், குல்பாடின் நைப், முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனாத், ஷரபுதீன் அஷ்ரஃப், ஃபசல்ஹாக் ஃபரூக், நூர் அஹ்மத், வஃபாதர் மொமண்ட் மற்றும் கைஸ் அஹ்மத்

இலங்கை அணி:

வனிந்து ஹசரங்க (C) சரித் அசலங்கா (vc), பதும் நிஸ்ஸங்க , குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன , நுவன் துஷார, சதீர சமரவிக்ரம