இலங்கையை சமாளிக்க இந்தியா வகுக்கும் திட்டம்…!

இலங்கை அணியின் பிரதான ஆறு பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் ரைட் ஹேண்ட் ; மூன்று பேர் லெப்ட் ஹேண்ட்.

இதில் பந்தை தாக்கி ஆடக்கூடிய ஹிட்டர்களாக மூன்று இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் மூவருமே சுழற்பந்து வீசப்படும் மிடில் ஓவர்களில் வரக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இந்தக் காரணத்தால் ஆப் ஸ்பின்னர் அஷ்வின் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இரண்டு லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதால், அந்த நேரத்தில் இரு முனைகளிலும் ஆப் ஸ்பின் வீச இந்திய கேப்டன் விரும்பலாம். இதனால் தீபக் ஹூடா அணியில் தொடரலாம்.

மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் உடல்நிலை சரியாகி இருந்து, ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், தீபக் ஹூடா வெளியே போக இவர் வருவார். இது நிகழ்ந்தால் நிச்சயம் அஷ்வின் சாகலுக்குப் பதில் அணியில் இருப்பார்!

“நாங்கள் ஒரு நேரத்தில் சூழ்நிலை, நிபந்தனை மற்றும் எதிரணி மூன்றோடோடும் விளையாடுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். இதனால் முன்கூட்டியே ஒரு அணியை தேர்வு செய்வதில்லை” – இது ராகுல் டிராவிட் சொன்னது. அதனால் சூழ்நிலைகள் உருவாக்கும் தேவைகள் பொருத்து இந்திய அணியில் போட்டிக்கான அணி அமைக்கப்படுகிறது. இந்த வகையில் பார்த்தால், சாகலுக்குப் பதில் அஷ்வின் அணியில் இருப்பது ஏறக்குறைய உறுதி என்று நினைக்கிறேன். தீபக் ஹூடாவிற்குப் பதில் ஆவேஸ் கான் என்பதை மட்டும் ஆடுகளம் முடிவு செய்யலாம்!

இந்தப்போட்டியில் அஷ்வின் எடுக்கப்படாமல் போனாலோ, அக்சர் படேல் எடுக்கப்பட்டாலோ, அது என்னளவில் சரியான முடிவாக இருக்காது. அக்சர் படேல் போன போட்டியில் விளையாடி இந்த போட்டியில் இருந்திருக்க வேண்டியவர். இந்தப் போட்டிக்கு நேரடியாக எடுக்கப்படக் கூடியவர் இல்லை!

✍️ Richards