இலங்கையை சுழலில் சிக்கவைக்க அணிக்குள் வருகிறார் அக்சர்…!
பெங்களூருவில் மார்ச் 12ம் தேதி தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக இடது கை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொஹாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது, மூன்று நாட்களுக்குள் போட்டியை முடித்தது
முதல் டெஸ்டில் குல்தீப் விளையாடும் அணியில் இடம்பெறவில்லை, இந்தியா மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஜெயந்த் யாதவை சேர்ந்திருந்தது. ஜெயந்த் இரண்டு இன்னிங்ஸிலும் விக்கெட் கைப்பற்றாது ஏமாற்றினார் , அதே நேரத்தில் அவரது சுழல் பங்காளிகளான ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து 15 விக்கெட்டுகள் கைப்பற்றி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்தநிலையில் 2 வது டெஸ்ட்டுக்கான அணிக்கு திரும்பியுள்ள அக்சர் படேல் நிச்சயமாக 3 வது சுழல் பந்து வீச்சாளராக அணியில் விளையாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.