இலங்கையை வீழ்த்த முடியும் – ஜிம்பாப்வே பயிற்சியாளர் எச்சரிக்கை..!
இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக ஜிம்பாப்வே அணி எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறுவதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்துள்ள சூப்பர் லீக் சுற்றின் ஒரு பகுதியாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளது.
இந்த போட்டி குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கிரிக்இன்ஃபோவிடம் கூறுகையில், இலங்கை அணியை தோற்கடிக்க முடியும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் ஜிம்பாப்வே பயிற்சியாளர் தெரிவித்த கருத்துக்கள்,
“நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு முக்கியமானது. ஏனெனில் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற சூப்பர் லீக் போட்டிகள் மட்டுமே ஒரே வழி. இதற்காக போட்டியை சிறப்பாக தொடங்குவதும் முக்கியம். “எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, இலங்கையை தோற்கடிக்க முடியும் என்று எப்போதும் நம்புகின்றேன். ஏனென்றால் நாங்கள் Pro50 போட்டியில் (ஜிம்பாப்வேயில் நடந்த உள்ளூர் தொடர்) நன்றாக விளையாடினோம்.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், போட்டித் தொடரின் அட்டவணை கீழே,
• முதல் ODI – ஜனவரி 16 – 2.30PM
இரண்டாவது ODI – ஜனவரி 18 – 2.30PM
• மூன்றாவது ODI – ஜனவரி 21 – 2.30 PM
இந்தப் போட்டிகள் அனைத்தும் இரவு பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளதோடு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதியாக ஜிம்பாப்வே அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது 3-2 என தொடரை வெற்றிகொண்டது, அதன் பின்னர் அணித்தலைவராக விளங்கிய மத்தியூஸ் பதவி விலகினார், பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சி நோக்கி பயணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.