இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்…!

இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ரொமேஷ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரொமேஷ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தோடு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மக்கி ஆர்தர் அந்த பதவியில் இருந்து விலகிக்கொள்ள, புதிய பயிற்சியாளர் நியமனம் இதுவரைக்கும் உறுதிப்படுத்தப் படாத நிலையிலேயே இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயலாற்றிய ரொமேஷ் ரத்னாயக்கவின் நியமனம் அமைந்துள்ளது.

மஹேல ஜெயவர்த்தன பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டாலும், இலங்கை இளையோர் அணியை உலக கிண்ண போட்டிகளில் நெறிப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுள்ள காரணத்தால் அவர் மேற்கிந்திய தீவுகள் நோக்கி வரும் 9 ம் திகதி பயணிக்கவுள்ளார்.

இதன் காரணத்தால் ரொமேஷ் ரத்னாயக்க முழுமையான பயிற்றுவிப்பு பணியை பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.