இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சாளர் நியமனம்…!

பாகிஸ்தானுக்காக 163 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அகிப் ஜாவெத், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) உள்ள லாகூர் கிலாண்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்படுகின்றார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக்கிப் ஜாவேத் தமது தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை ஜூன் 2024 இல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது.

சர்வதேச அளவில் விளையாடுவதிலும் பயிற்சியளிப்பதிலும் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள ஜாவேத், உடனடியாக தனது பணியைத் தொடங்குவார்.

SLC CEO ஆஷ்லி டி சில்வா, வரவிருக்கும் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்துவதில் ஜாவேட்டின் திறமையில் நம்பிக்கை இரும்பதால் இந்த நியமனம் அமைந்ததாக தெரிவித்தார்.