இலங்கை அணிக்கு வந்த இன்னுமொரு சிக்கல்- இளம் வேகப்பந்து வீச்சாளரும் இந்தியாவுக்கு எதிராக பங்கேற்பது சந்தேகம்…!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி பலவிதமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கிறது.
இலங்கை வீரர்கள் இங்கிலாந்து தொடரில் பங்கேற்றபோது பயிற்சியாளர்கள் குழாம் சிலருக்கு கொரோனா ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்துன் வீரக்கொடி உள்ளிட்ட வீரர்களுக்கும் கொரோனா ஏற்பட்டமை இலங்கைக்கு பலத்த நெருக்கடியை கொடுத்தது, இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குசல் பெரேரா உபாதை காரணமாக அவதிப்பட்டு இந்திய தொடரை தவறவிடும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்தநிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் வினுர பெர்னான்டோ கணுக்கால் உபாதைகளால் விளையாடுவது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் தொடர்ச்சியான நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கை அணி இந்தியாவை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று ரசிகர்கள் கவலையோடு காத்திருக்கிறார்கள்.