இலங்கை அணியினர் பயணித்த பஸ்ஸில் இருந்து மீட்கப்பட்ட 2 தோட்டாக்கள் _வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கை அணியினர் பயணித்த பஸ்ஸில் இருந்து மீட்கப்பட்ட 2 தோட்டாக்கள் _வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

சண்டிகர் காவல்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை (பிப்ரவரி 26) இலங்கை கிரிக்கெட் குழுவை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு புல்லட் குண்டுகள் மீட்கப்பட்டன.

இந்திய ஊடகச் செய்திகளின்படி, வழக்கமான சோதனையின் போது, ​​தனியார் பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் இருந்து இரண்டு தோட்டாக் குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

லலித் ஹோட்டலில் இருந்து மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் மைதானத்திற்கு இலங்கை அணி வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக் குறித்த பஸ் பயன்படுத்தப்பட்டது.

மெட்டல் டிடெக்டர்கள் (Metal Detectors) மூலம் பேருந்தை சோதனை செய்த போது போலீசார் புல்லட் குண்டுகளை மீட்டனர். அப்போது, ​​ஐடி பார்க் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓட்டல் வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

முதல் புலனாய்வு அறிக்கை (FIR) இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில், போலீசார் தங்களது தினசரி டைரி அறிக்கையில் (DDR) வழக்கை பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சண்டிகரில் உள்ள செக்டார் 17ல் இயங்கும் தாரா பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனியார் பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

காவல் துறைக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, இந்த பேருந்து சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் பஞ்சாபில் திருமணங்களின் போது துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம் எனவும் அறியவருகின்றது.

பயன்படுத்திய தோட்டாக்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 4 ஆம் திகதி மொகாலி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கவுள்ள நிலையில் ,இலங்கை அணியின் பஸ் இல் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது .

இருந்தாலும் இந்திய செய்திகளின் படி இது ஒரு பாரதூரமான விடயமாக இல்லை எனவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.