இலங்கை அணியின் அடுத்த தலைவர் யார் -வலுக்கும் எதிர்பார்ப்பு ..!

இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இலங்கை அணி உண்மையிலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மற்றும் நியூசிலாந்துடனான போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்திய ரசிகர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இடம் குறித்து சந்தேகத்தில் இருந்தனர்.

இந்த ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மட்டுமே வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு இலங்கை நுழையும்.எனினும், துரதிஷ்டவசமாக இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இருப்பினும், நியூசிலாந்தில் இலங்கை அணி கணிசமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும், அயர்லாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் இடம்பெறும் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விடைபெறுவதாக இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

திமுத் கருணாரத்ன இதனை முன்னர் தெரிவித்திருந்ததுடன், தேவை ஏற்படும் போது பதவியிலிருந்து விலகி தனஞ்சய டி சில்வாவிற்கு தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, இலங்கை டெஸ்ட் அணியின் அடுத்த தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எமது YouTube தளத்திற்கு 👇