இலங்கை அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்- நவீத் நவாஸ்…!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீத் நவாஸ் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (CAC) முதல் தேர்வாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
SLC (இலங்கை கிரிக்கெட்) இல் உள்ள முக்கிய நபர்களின் ஆதாரங்களின்படி, CAC இலங்கையின் பயிற்சியாளர் பணிக்கு பல வேட்பாளர்களின் பட்டியலை அனுப்பியுள்ளது.
“நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு பட்டியலை சமர்ப்பித்தோம், தேசிய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நவீத் நவாஸ் எங்கள் முதல் தேர்வு” – CAC உறுப்பினர்களில் ஒருவர், கொழும்பில் இருந்து தொலைபேசியில் பிரத்தியேகமாக தகவல் வழங்கியதாக Pakistan Observer தகவல் வெளியிட்டுள்ளது.
“நாங்கள் 23 வேட்பாளர்களை நேர்காணல் செய்தோம், மொத்தம் 12 மணிநேர நேர்காணல் செயல்முறை வெளிநாட்டினரையும் உள்ளடக்கியது”.
பால் ஃபார்ப்ரேஸ் மற்றும் கிரஹாம் ஃபோர்டு ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு பின்வாங்கிய பிறகு இப்போது முதல்நிலை தேர்வாக நவீத் நவாஸ் பெயர் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.
இது பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு மட்டுமல்லாது நவீத் நவாஸ் பெயர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான இறுதிப் பெயராக ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது எனவும் அறிய வருகின்றது.
2020 ல் இடம்பெற்ற இளையோர் உலக கிண்ண போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்த பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளராக நவீத் நவாஸ் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.