இலங்கை அணியின் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா விபரம் -முழுமையான அட்டவணை

வங்கதேசத்துடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்தொடர் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கை அணி தொடரை 1-2 என்ற அடிப்படையில் இழந்திருக்கன்றது.

குசல் பெரேரா தலைவராக விளையாடிய இந்த தொடரில் இலங்கையின் இளம் வீரர்கள் பலர் தமக்கான வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வாளர்களை கவர்ந்திருக்கிறார்கள் .

இதனடிப்படையில் இலங்கை அணி அடுத்து இங்கிலாந்து நோக்கி புறப்பட தயாராக இருக்கிறது.

 

ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர், ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ,இலங்கை அணிகளுக்கிடையிலான தொடர் விபரம் உங்களுக்காக ????

1வது T20-ஜூன் 23

2வது T20-ஜூன் 24

3வது T20-ஜூன் 26

1வது ஒருநாள் போட்டி -ஜூன் 29

2 வது ஒருநாள் போட்டி -ஜூலை 1

3 வது ஒருநாள் போட்டி -ஜூலை 4