இலங்கை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளருக்கு உபாதை – உலக கிண்ணம் கேள்விக்குறியானது…!
ஓமானுக்கு எதிரான நட்பு ரீதியிலான முதல் டி20 ஆட்டத்தின் போது இலங்கை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்ததால் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நுவன் பிரதீப் ஆட்டத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் பெவிலியனுக்கு நடந்து சென்றபோது தொடை எலும்பு காயம் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது . ஸ்ரீ லங்கா கிரிக்கெட் காயத்தை உறுதிப்படுத்தியதுடன், நுவானின் நிலையை மதிப்பிடுவதாகவும் அதன் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நுவான் பிரதீப் 4 வாரங்களுக்கு ஓய்வெடுக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது அவர் உலகக் கோப்பையை இழக்க நேரிடும் என்றும் விளையாட்டு பத்திரிகையாளர் ரெக்ஸ் கிளெமெண்ட் தனது ட்டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Out for four weeks.
— Rex Clementine (@RexClementine) October 8, 2021
இலங்கை அணியின் ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா காயத்தில் இருந்து குணமடைந்தார், அவர் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் தொடை எலும்பு முறிவுக்குள்ளானார் . குசல் பெரேரா ஓமானுக்கு எதிராக 2 வது டி20 போட்டியில் விளையாடுவாரா என்று தேர்வர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் வங்காளதேசம் மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் அவர் மீண்டும் விளையாடலாம் என்றும் நம்பப்படுகின்றது.