இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக விளையாடப்போவது யார்- தகவல் வெளியாகியது…!

இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.அந்த போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக யார் விளையாடுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் தலைவராக செயல்படும் குசல் பெரேராவும் விக்கெட் காப்பு திறமை கொண்டவர், இலங்கை அணி சார்பில் விக்கெட் காப்பாளராகவும் குசல் பெரேரா செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக பங்களாதேஷ் அணியுடனான தொடரில் தானே செயல்படவுள்ளதாக குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணாத்தால் இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான நிரோஷன் டிக்வெல்ல ஆடும் பதினொருவர் அணிக்குள் வருவதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

49 இன்னிங்ஸ்களில் 2 சதம், 9 அரைசதம் அடங்கலாக 32 எனும் நல்ல சராசரியில் டிக்வெல்ல 1571 ஓட்டங்களைக் குவித்துள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பொறுத்திருந்து பார்க்கலாம் டிக்வெல்ல அணியில் இடம்பிடிக்கிறாரா என்பதனை..