இலங்கை அணியில் மீண்டும் தலைமைத்துவ மாற்றம்- மூத்த வீரர்கள் அதிரடி நீக்கம்…?

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டுமொரு அதிரடி தலைமைத்துவ மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கையின் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இலங்கையின் பல சிரேஷ்ட வீரர்களை அணியிலிருந்து ஓரம்கட்டிவிட்டு பல துடிப்பான இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்புக் கொடுக்க எண்ணியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்சேலோ மத்தியூஸ், சுரங்க லக்மால், திசார பெரேரா , சந்திமால் ஆகியோரை நீக்கும் திட்டத்தில் இருப்பதாக அறிய வருகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரிலும், ஜூன் மாதமளவில் இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் T20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இந்தநிலையில்தான் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணியில் மாற்றங்கள் நிகழவுள்ளன, அப்படி திமுத் கருணாரத்ன அணியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் தசுன் சானக்கவிடம் அணித்தலைமைத்துவம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் அறியப்படுகின்றது.