இலங்கை அணியும் துடுப்பாட்டத்தில் அசத்தல்…!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய 3 ம் நாளில் துடுப்பாடி இலங்கை அணியும் வலுவான துடுப்பாட்ட திறனை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி இலங்கையின் பந்து வீச்சாளருக்கு பலத்த நெருக்கடியை தோற்றுவித்தது.

ஆரம்ப வீரர் தமீம் இஃபால் 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தாலும் ,
பங்களாதேஷ் அணி முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் சார்பில் நசுமுல் ஹுசைன் 163 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொமினுல் ஹக் 127 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.இன்றைய 3 ம் நாளில் ஆடிய பங்களாதேஷ் 7 விக்கெட்டுக்களை இழந்து 541 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பதிலுக்கு ஆடிய இலங்கை அணி இன்றைய 3 ம் நாள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ஆட்டம் இழக்காது அணித்தலைவர் கருணாரத்ன 85 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

ஆரம்ப விக்கெட்டுக்காக கருணாரத்ன , திரிமான்ன ஆகியோர் 114 ஓட்டங்களை பெற்றனர், திரிமான்ன 58 ஓட்டங்களையும் ,மத்தியூஸ், ஒஷாத பெர்ணாண்டோய் ஆகியோர் முறையே 25 , 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நாளை போட்டியின் 4ம் நாள் ஆட்டம் தொடரும்.