இலங்கை அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா- பென் ஸ்டொக்ஸ் தலைமையில் புதிய அணி களமிறங்குகின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஏழு உறுப்பினர்கள் – மூன்று கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நான்கு பயிற்சியாளர் குழுவினர் செவ்வாயன்று கொரோன தொற்றுக்கு உள்ளானதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கால அட்டவணையின்படி தொடரும் என்பதை ECB உறுதிப்படுத்தியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 8 ஆம் தேதி கார்டிஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து அரசாங்கத்தின் நெறிமுறையைப் பின்பற்றி ஜூலை 4 முதல் சுயதனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையில் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடரவுள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் அணியின் தலைவராக தொடர்வார் என்றும் புதிய அணியொன்று பாகிஸ்தானை சந்திக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.