இலங்கை அரசுக்கெதிராக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீர்ர்…!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலிமுகத் திடலில் ஏராளமான இலங்கை பொதுமக்கள் #Gohomegotta என கோஷமிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்து போராடி வருகின்றனர்.

இதற்கு பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய ஆதரவை முன்வைத்து வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாகவே இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் முக்கியமானது.

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

24 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த தம்மிக்க பிரசாத், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.