இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி ஆரம்பம், நாணய சுழற்சி நிறைவு, #SLvIND அணியில் 3 அறிமுகங்கள் …!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி ஆரம்பம், நாணய சுழற்சி நிறைவு இலங்கை,இந்திய அணியில் 3 அறிமுகங்கள் …!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பித்திருக்கிறது.

சற்று முன்னர் நிறைவுக்கு வந்த நாணயச்சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை, இந்திய அணிகள் சார்பில் இன்று 3 அறிமுகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை அணி சார்பில் பானுக்க ராஜபக்சவிற்கு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் கலக்கிய இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

அதுமாத்திரமல்லாமல் பாண்டியா சகோதரர்களுடன் குல்தீப் ,சஹால் சுழல் பந்து கூட்டணியும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்தாவது தலைவரின் கீழ் இலங்கை அணி  ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை சந்திக்கின்றமை முக்கியமானது.

இலங்கை மற்றும் இந்திய அணிகள் வீரர்கள் விபரம் வருமாறு.