இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முழுமையான போட்டி அட்டவணை வெளியீடு..!

 

நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான அடுத்த ஹோம் சீசனில் இந்திய அணி விளையாடும் போட்டி அட்டவணைகள் வெளியாகியுள்ளன.

இதிலே இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெப்ரவரி 5 முதல் மார்ச் 1 வரை பெங்களூரில் நடைபெறும், இரண்டாவது டெஸ்ட் மார்ச் 5-9 வரை மொஹாலியில் நடைபெறும்.

மூன்று டி 20 போட்டிகள் மொஹாலி, தர்மசாலா மற்றும் லக்னோவில் மார்ச் 13, 15, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

அதன்பின்னர் சென்னை, பெங்களூர், நாக்பூர், ராஜ்கோட் மற்றும் டெல்லியில் முறையே ஜூன் 9, 12, 14, 15, 19 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி 20 களுடன் இந்தியாவின் கோடைகால போட்டிகள் முடிவடையும்.

இந்தியா vs இலங்கை (2022)

முதல் டெஸ்ட்– பெப்ரவரி 25-01 மார்ச், பெங்களூர்

2 வது டெஸ்ட்– மார்ச் 05-09, மொஹாலி

முதல் டி 20– மார்ச் 13, மொஹாலி

2 வது டி 20– மார்ச் 15, தர்மசாலா

3 வது டி 20- மார்ச் 18, லக்னோ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா (2022)

முதல் டி 20– ஜூன் 09, சென்னை

2 வது டி 20– ஜூன் 12, பெங்களூர்

3 வது டி 20– ஜூன் 14, நாக்பூர்

4 வது டி 20- ஜூன் 15, ராஜ்கோட்

5 வது டி 20– ஜூன் 19, டெல்லி