இலங்கை- இந்திய தொடருக்கு சிக்கல், மாற்றுத்திகதிகள் விரைவில் அறிவிப்பு….!
இலங்கை கிரிக்கெட் அணியில் ஏற்பட்டிருக்கும் கொரோனா காரணமாக இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு பயிற்சி ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதால் இலங்கை வீரர்களுக்கும் கொரோனா தொற்றுக்குரிய வாய்ப்பிருப்பதாகவே நம்பப்படுகின்றது. இலங்கை வீரர்கள் தற்போது ஞாயிற்றுக்கிழமை வரை கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
13 ம் திகதி ஆரம்பிக்கவிருந்த போட்டிகள் பிற்போடப்பட்டு ஒருநாள் போட்டிகள் ஜூலை 17, 19 , 21 ஆகிய தேதிகளில் நடைபெறும், T20 போட்டிகள் ஜூலை 24, 25 , 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்.