இலங்கை , இந்திய தொடர் – இதுவரையான சாதனைகளின் பட்டியல்!

இந்தியா vs இலங்கை ஒருநாள் தொடர் கோவிட் -19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜூலை 18 ஆம் தேதி ஆரம்பிக்கும் என்று நம்பப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒருநாள் தொடரில், இலங்கைக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த தொடரில் இந்தியா 2 ம் தர அணியை அனுப்பிய போதிலும் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இந்தியா மிகவும் வாய்ப்புகள் நிறைந்த அணியாகவே நோக்கப்படுகிறது.

ஷிகர் தவான் தலைமையிலான அணி கொழும்பில் 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்த இரு அணிகளும் கடந்த காலங்களில் எவ்வாறு ? பெற்றன என்பதைப் பார்ப்போம்.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 10 இருதரப்பு ஒருநாள் தொடர் விபரங்கள் ???

2017 இல் இந்தியா ?? வெற்றி 2-1

2017 இல் 5-0 என்று இந்தியா ?? வெற்றி

2014 இல் 5-0 என்று இந்தியா ??  வெற்றி

2012 இல் இந்தியா ?? வெற்றி 4-1

2009 இல் 3-1  இந்தியா ?? வெற்றி

2009 இல் இந்தியா ?? வெற்றி 4-1

2008 இல் இந்தியா ?? வெற்றி 3-2

2007 இல் இந்தியா ?? வெற்றி 2-1

2005 இல் இந்தியா ?? வெற்றி 6-1

1997 இல் 3-0 என்று இலங்கை ?? வெற்றி

கடந்த 10 இருதரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை ஒரேயொரு (1997) ஒருநாள் தொடரை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் 1997 க்கு பின்னர் இலங்கை அணி எதுவித தொடரையும் வெற்றிகொள்ளவில்லை.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான டி20 இருதரப்பு தொடர் முடிவுகள்:

2020 இல் இந்தியா ?? வெற்றி 2-0

2017 இல் 3-0 இந்தியா ??வெற்றி பெற்றது

2017 இல் 1-0 என்று  இந்தியா ?? வெற்றி

2016 இல் இந்தியா ?? 2-1 வெற்றி

2012 இல் 1-0 இந்தியா ?? பெற்றது

2009 இல் 1-1 என சமன் செய்யப்பட்டது

2009 இல்  இந்தியா ??1-0 வெற்றி

இந்தியாவுக்கு எதிரான டி20 இருதரப்பு தொடரில் இலங்கை ஒருபோதும் வென்றதில்லை என்பதை கவனத்தில் கொள்ளலாம்.

இந்தியா மற்றும் இலங்கை ஒருநாள் இருதரப்பு தொடரின் குறிப்பிடத்தக்க பதிவுகள் சில:

* எம்.எஸ். தோனியின் 183 * ஓட்டங்கள்

* விராட் கோலி 2008 ஒருநாள் தொடரில் சர்வதேச அளவில் அறிமுகமானார். பின்னர், 2009 இல் ரவீந்திர ஜடேஜாவும் இலங்கைக்கு எதிராகவே அறிமுகமானார்.

* ரோஹித் ஷர்மாவின் 264  ஓட்டங்கள் ஒருநாள் போட்டியில் இதுவரை பெற்ற அதிகபட்ச ஸ்கோர். பின்னர் 2017 ஆம் ஆண்டில் அவர் மற்றொரு இரட்டை சதத்தை அடித்தார் மற்றும் டி20 தொடரில் வேகமான சதத்தையும் பதிவு செய்தார்.

* விராட் கோலி, சச்சின் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 8 சதங்களை அடித்தனர்

தற்போதைய அணியில் உள்ள வீரர்கள் ?

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக ஓட்டங்கள்: ஷிகர் தவான் (983 ஓட்டங்கள்)

ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: புவனேஷ்வர் குமார் (17 விக்கெட்)

டி20 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக ஓட்டங்கள் : ஷிகர் தவான் (289 ஓட்டங்கள்)

டி20 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: யுஸ்வேந்திர சாஹல் (14 விக்கெட்)