இலங்கை இளையோர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்- தேசிய அணியுடன் அவிஷ்க …?
இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைமை பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்ட அவிஷ்க குணவர்தன அந்த பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார், அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய தொடரின்போது அவிஷ்க குணவர்தன தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பதவியில் அவிஷ்க தொடர்வாரா என்பது தொடர்பில் தெளிவான தகவல் எதுவும் இல்லையாயினும், 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணிக்கு ஜெஹான் முபாரக் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழுப்பு ராயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், LPL சாம்பியன்களான ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் ஜெஹான் முபாரக் செயல்பட்டவர்.
இலங்கை அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளிலும் 40 ஒருநாள் போட்டிகளிலும் ஜஹான் முபாரக் தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.