இலங்கை உலக கிண்ண அணியில் உத்தியோகபூர்வமாக 5 வர் இணைப்பு…!

இலங்கை உலக கிண்ண அணியில் உத்தியோகபூர்வமாக 5 வர் இணைப்பு…!

இலங்கையின் T20 உலக கிண்ண போட்டிகளுக்கான இலங்கை உலக கிண்ண அணியில் உத்தியோகபூர்வமாக 5 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

01) பத்தும் நிஸ்ஸங்க
02) மினோத் பானுக
03) அசின் பண்டார
04) லக்ஷன் சந்தகன்
05) ரமேஷ் மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக்குழு குறித்த 5 வீரர்களையும் உத்தியோகபூர்வமாக இணைத்து கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் அனுமதி வழங்கியுள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றிருந்த லஹிரு மதுஷங்க உபாதையடைந்துள்ளதால் அவர் உலக கிண்ண அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட அணியும், 4 வீரர்கள் மேலதிக வீரர்களாகவும் முன்னர் பெயரிடப்பட்டிருந்தனர், இந்தநிலையில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வீரர்களுடன் 23 வீரர்கள் உலக கிண்ண அணியுடன் பயணிக்கவுள்ளனர்.

இலங்கை அணி உலக கிண்ண போட்டிகளுக்காக வருகின்ற 3 ம் திகதி ஓமான் நோக்கி பயணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.