இலங்கை கிரிக்கட்டை உருப்படுத்த ரசிகர்கள் எடுத்த நூதன போராட்டம் – வாருங்கள் கைகோர்திடுவோம்..!

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து சமூக ஊடகங்களில் பல வெறுப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

அவர்கள் தற்போது இங்கிலாந்தில் மட்டுப்படுத்தப்பட்ட  ஓவர்கள் சுற்றுப்பயணத்தில் உள்ளனர். நேற்று நிறைவுக்குவந்த T20 தொடரை இலங்கை அணி 3-0 என தோற்றிருக்கிறது. இது இலங்கையின் தொடர்ச்சியான ஐந்தாவது தொடர் தோல்வியாகும் .

இதனால் ஆத்திரம் தாங்காத இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் தமது வெறுப்பையும் , ஆத்திரத்தையும் சமூக வலைத்தளத்தில் நூதன வழியில் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

தேசிய வீரர்கள் மீது தங்கள் மனக்கசப்பைக் காட்ட, ரசிகர்கள் #unfollowcricketers என்ற ஹேஷ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலமாக இலங்கை கிரிக்கெட்  வீரர்களை Unfollow செய்து அவர்களை பின்தெடர்வதை தவிர்க்க முனைந்துள்ளதன் ஓர் அங்கமே இந்த Hashtag உருவாக காரணமாக அமைந்துள்ளது..

அணியின் உதவிதலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் ஆரம்ப ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலக ஆகியோரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கங்களை ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்கள் பின்பற்றலில் இருந்து விலகியுள்ளனர்.

“தோல்வியுற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பின்தொடர்வதை தவிர்ப்பதே பிரச்சாரத்தின் நோக்கம்” என்று அறியக்கிடைக்கிறது.

முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது டி 20 போட்டியில், இங்கிலாந்து  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி 20 ஐ தொடரின் கடைசி போட்டியில் இலங்கை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றம் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட்டை இப்படியாவது உருப்படுத்த நினைக்கும் இலங்கை கிரிக்கட் ரசிகர்களோடு நீங்களும் கைகோர்கலாம்.

இப்படியாவது திருத்துவோம் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.