இலங்கை கிரிக்கட்டை காப்பாற்றுங்கள் – சனத் ஜெயசூரிய அவசர கோரிக்கை …!

இலங்கை கிரிக்கட்டை காப்பாற்றுங்கள் – சனத் ஜெயசூரிய அவசர கோரிக்கை …!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தான டுவென்டி டுவென்டி தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.

மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை தழுவி 3-0 என்று அவமானகரமான தோல்வியை அடைந்தது.

இங்கிலாந்துடனான தொடர் தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய ஒரு அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகவும் சோகமான நாள். நிலைமை சிக்கலானது. கிரிக்கெட்டைக் காப்பாற்ற எங்களுக்கு உடனடி நடவடிக்கைகள் தேவை” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.