இலங்கை கிரிக்கட் அணியில் தலைமைத்துவ மாற்றம்- தலைமை தேர்வாளர் தரும் விளக்கம்..!

“தலைமையில் மாற்றமில்லை, தலைவர் தொலைநோக்கு பார்வை கொண்டவர்” என ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், இலங்கை ஒருநாள் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக இலங்கையின் பல முக்கிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அணியின் அவநம்பிக்கை காரணமாக தற்போதைய ஒருநாள் போட்டித் தலைவர் தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்படுவார் என பல நம்பத்தகுந்த உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

லங்காதீப மற்றும் தெரண அருண ஆகிய பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பார்வையாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்பது இரகசியமல்ல.

ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட செய்தியை டெய்லி நியூஸ் இன்று செய்தி வெளியிட்டிருந்தது. தற்போதைய இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் இருக்காது என பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்ததாகவும் செய்தி வெளியினது.

எவ்வாறாயினும், எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் போட்டித் தலைவர் பதவி திமுத்துக்கு வழங்கப்படும் என இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, ​​இலங்கை விளையாட்டு ரசிகர்கள் சரியான செய்தி என்ன என்பதை அறியும் குழப்பத்தில் உள்ளனர். எவ்வாறாயினும், ஒருநாள் போட்டித் தலைவர் பதவி மாற்றம் குறித்து இலங்கை கிரிக்கெட் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எதற்கும் காத்திருப்போம் .