இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த தலைமை தேர்வாளர் யார் -முன்னாள் தலைமை தேர்வாளர் கருத்து !

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை தேர்வாளராக செயற்பட்ட அசந்த டீ மைல் இந்த வாரம் தன்னுடைய பதவியிலிருந்து விலகி கொண்டிருந்தார் .

இலங்கை அணி அண்மைக்காலமாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அதன் விளைவாக அவருடைய பதவி விலகல் அமைந்திருந்தது .

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அடுத்த தேர்வுக்குழு தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்விக்கு மஹேல ஜெயவர்தன இருக்கிறார் தானே அவரை நியமிக்கலாம் என்று அசந்த டீ மெல் கருத்து தெரிவித்திருக்கிறார் .

எனினும் ஊடகங்கள் மூலமாக தான் தலைமை தேர்வாளராக செயல்படவுள்ளதாக வெளிவரும் இவ்வாறான கருத்துக்களில் உண்மை இல்லை என்று மஹேல மறுத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.