இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையாளர்கள் செய்த நல்ல காரியம்…!

இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையாளர்கள் செய்த நல்ல காரியம்…!

இலங்கை கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளர்களான டயலாக் ஆக்ஸியாடா PLC மற்றும் இலங்கை ரக்பி அணியினர் இணைந்து ஒரு நல்ல கைங்கரியத்தை முன்னெடுத்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டிற்கான தொடர்ச்சியான சமூக திட்டங்களில் ஒத்துழைக்க இலங்கை கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளரான டயலாக் ஆக்ஸியாடா PLC, சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி சமூகப்பணியை முன்னெடுத்துள்ளது.

முதல் திட்டம் பத்தரமுல்லையில் உள்ள கலகுபுகே லூயிஸ் பெரேரா முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்தது, இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் ரிஸ்லி இலியாஸ், ஆலோசகர் கெவின் ஹெர்ப்ட் மற்றும் ஆண்கள் அணியின் உறுப்பினர்கள் ஓமல்கா குணரத்ன, கெவின் டிக்சன் மற்றும் மகளிர் அணித் தலைவர் அனுஷா அதானநாயக்க ஆகியோர் இந்த கொடை வளங்கள் நிகழ்வில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

குறித்த இல்லத்தில் உள்ளவர்களுடன் கலந்துரையாடி பலவித உதவிகளையும் புரிந்துள்ளமை பாராட்டத்தக்கது.