இலங்கை கிரிக்கெட்டின் தலைமை தேர்வாளராக மஹேல ?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக வரவிருப்பதாக வெளிவரும் சமூக ஊடக செய்திகளை மறுத்துள்ளார்.

நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அமைத்துள்ள தேசிய விளையாட்டு சபை (National Sports Council) தலைவராக தனது தற்போதைய பதவியில் தொடருவேன் என்று கருத்து வெளியிட்ட மஹேல கிரிக்கெட் தேர்வாளர் குறித்த வதந்தியை மறுத்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மஹேல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சின் தகவல்படி, அசந்த டி மெல் பதவி விலகியதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் தகுதியானவரை பரிந்துரைக்கவில்லை .

நடைமுறையின் பிரகாரம் ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ தேசிய தேர்வுக் குழுவிற்கு ஒரு பெயரை அனுப்ப வேண்டும், அவர்கள் பெயரை அனுப்பியதும், அதை ஒப்புதல் அளித்து இறுதி ஒப்புதலுக்காக விளையாட்டு அமைச்சருக்கு அனுப்புவர்’ இதுதான் நடைமுறையாக காணப்படுகின்றது.

ஆகவே தேசிய விளையாட்டு சபை (National Sports Council) தலைவராக செயல்படும் மஹேல ஜெயவர்த்தன, எப்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேர்வுக்குழு தலைவராக முடியும் என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.

எது எவ்வாறாயினும் அசந்த டீ மெல்லின வெற்றிடத்துக்கு தகுதியான ஒருவரை நியமித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விருத்திக்கு மஹேல போன்ற ஒரு கனவான் உதவிடமாட்டாரா என்பதே ஒவ்வொரு இலங்கை ரசிகர்களதும் தற்போதைய எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.